New Updates! Fresh news just arrived.

இழப்பீடு செலுத்தும் பணியில் இருந்து கிராம சேவகர்கள் விலகல...

News

இழப்பீடு செலுத்தும் பணியில் இருந்து கிராம சேவகர்கள் விலகல்!

January 19, 2026 2:10 pm
இழப்பீடு செலுத்தும் பணியில் இருந்து கிராம சேவகர்கள் விலகல்!
டித்வா புயலினால் பகுதி அளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவினை வழங்கும் பணிகளிலிருந்து இன்று (19) முதல் விலகிக்கொள்ள கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பானது தீர்மானித்துள்ளது.

குறித்த கொடுப்பனவுகளினை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலுள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்தத் தீர்மானத்தினை எடுத்ததாக அந்தச் சங்கத்தினுடைய இணைத் தலைவர் நந்தன ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கொடுப்பனவு வழங்கும் செயல்முறையினை அரசாங்கம் இன்னும் முறையான வகையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டித்வா புயலினால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 5 இலட்சம் ரூபாவினை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

ஆனால், இது தொடர்பான சுற்றறிக்கையில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம், அரச கணக்காளர்கள் சங்கம் என்பன ஏற்கனவே குறித்த பணிகளில் இருந்து விலகியிருந்தன.

இதனையடுத்து, அந்தப் பணிகளினை முன்னெடுக்கும் பொறுப்பு கிராம உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்று முதல் தாங்களும் குறித்த பணிகளில் இருந்து விலகுவதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பானது அறிவித்துள்ளது.

அத்தோடு, பேரிடர் கால கடமைகளில் ஈடுபடும் தங்களுக்கு அதற்குரிய போதுமான கொடுப்பனவுகளானது வழங்கப்படுவதில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now