ரமலான் காலத்திலும் விதிமீறல்: 6 வர்த்தகர்களுக்கு எதிராக ...
News
ரமலான் காலத்திலும் விதிமீறல்: 6 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தால் புதன்கிழமை நடைபெற்ற வாராந்த உணவு நிலைய பரிசோதனையில் தயிர் விற்பனை தொடர்பாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வர்த்தக நிலையம் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அங்கு விற்பனை செய்யப்பட்ட தயிரின் தரம் தொடர்பில் சந்தேகம் எழுந்ததினைத் தொடர்ந்து, அதே இரவே கௌரவ நீதிமன்றில் ‘B’ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
விசாரணையின் போது தயிரின் நிலையினை நேரில் பரிசீலித்த சம்மாந்துறை கௌரவ நீதவான், சம்பந்தப்பட்ட விற்பனையாளரினை கடுமையாக எச்சரித்ததோடு, சந்தேகத்திற்குரிய 58 தயிர் சட்டிகளினையும் உடனடியாக அழிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், வழக்கின் மேலதிக விசாரணைக்காக எதிர்வருக்கின்ற மார்ச் 21 ஆம் திகதி தவணை இடப்பட்டுள்ளது.
அத்தோடு, நேற்றைய தினம் மட்டுமே உணவு பாதுகாப்பு விதிமீறல்களில் ஈடுபட்ட 6 வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி, பொதுமக்களினுடைய நலனை பாதிக்கும் வகையில் தரமற்ற மற்றும் சந்தேகத்திற்குரிய உணவுப் பொருட்களினை விற்பனை செய்யும் செயல்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்றும், இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்தும் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் சம்மாந்துறை சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.
உணவுப் பொருட்களினை கொள்வனவு செய்யும் போது அவற்றினுடைய தரம், தயாரிப்பு மற்றும் காலாவதித் திகதிகளினை கவனமாகச் சரிபார்க்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளதுடன், பொதுச் சுகாதாரப் பணிகள் மக்களின் நலனுக்காக இடையறாது தொடரும் எநாவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நூருல் ஹுதா உமர்