நாவற்குழியில் வன்முறை கும்பல் அட்டகாசம்: அடித்து நொறுக்கப...
News
நாவற்குழியில் வன்முறை கும்பல் அட்டகாசம்: அடித்து நொறுக்கப்பட்ட வீடு!
நாவற்குழி பகுதியில் வன்முறை குழுவால் நேற்றுமுன்தினம் இரவு வீடு ஒன்று அடித்து சேதப்படுத்தப்பட்டதாக நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மீட்டர் வட்டிக்கு பணத்தைப் பெற்றுவிட்டு அதனை அடைப்பதற்கு பல மடங்கு பணமானது செலுத்தப்பட்டும் கடன் தீரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வட்டிக்கு பணத்தைப் பெற்றவர்களுக்கும், கொடுத்தவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதினைத் தொடர்ந்து, அன்றிரவு குறித்த இடத்திற்கு வந்த வன்முறை கும்பலால் பணத்தினை பெற்றவரின் வீட்டின் மீது இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.