New Updates! Fresh news just arrived.

உயர்கல்விக்கு பெலாருஸ் செல்லும் இலங்கையர்களுக்கு விசா கட்...

News

உயர்கல்விக்கு பெலாருஸ் செல்லும் இலங்கையர்களுக்கு விசா கட்டணம் ரத்து

November 15, 2026 7:14 am
உயர்கல்விக்கு பெலாருஸ் செல்லும் இலங்கையர்களுக்கு விசா கட்டணம் ரத்து
உயர் கல்வி கற்பதற்காக முதன்முறையாக பெலாருஸ்ஸுக்கு வருகை தரும் இலங்கை மாணவர்களிடம் இருந்து அறவிடப்படும் நுழைவுக் விசா கட்டணத்தை ரத்து செய்ய பெலாருஸ் அரசு தீர்மானித்துள்ளது.

கடந்த மே மாதத்தில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், அந்நாட்டுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் விளைவாகவே இது இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பெலாருஸில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அந்நாட்டுக்கு வருவதற்கு விசா பெறும் முறையை எளிதாக்குவதற்கான அவசியமான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது அந்நாட்டில் உயர் கல்வி கற்க எதிர்பார்த்துள்ள இலங்கை மாணவர்களுக்கும், பெலாருஸில் கல்வி கற்கும் மாணவர்களின் குடும்பத்தினருக்கும் நிவாரணமாக அமையும் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now