வட்டுக்கோட்டை முதலியகோவில் பகுதியில் வாள்வெட்டு: பெண்ணின்...
News
வட்டுக்கோட்டை முதலியகோவில் பகுதியில் வாள்வெட்டு: பெண்ணின் விரல் துண்டானது!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியகோவில் பகுதியில் நேற்று (02) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் பெண்ணொருவரினுடைய இரண்டு விரல்கள் துண்டாகியுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஏற்கனவே அயல் வீட்டு இளைஞருக்கும் குறித்த பெண்ணினுடைய குடும்பத்துக்கும் இடையே முரண்பாடு காணப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணினுடைய கணவர் நேற்று வேலை முடிந்து வந்தவேளை அவரினை வழிமறித்து அவரது துவிச்சக்கர வண்டியினை குறித்த இளைஞர் பறித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் அவர் தனது மனைவிக்கு கூறிய நிலையில் மனைவி குறித்த இளைஞனோடு, வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில், இளைஞன் குறித்த பெண் மீது வாள்வெட்டு தாக்குதலினை நடாத்தியுள்ளார்.
வாள்வெட்டில் படுகாயமடைந்த பெண், நோயாளர் காவு வண்டியின் ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த இளைஞனுக்கு ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்