New Updates! Fresh news just arrived.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்: உலகளாவிய பணவீக்கம் உயர...

News

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்: உலகளாவிய பணவீக்கம் உயரக்கூடும் - சர்வதேச நாணய நிதியம் கணிப்பு!

April 7, 2026 12:35 pm
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்: உலகளாவிய பணவீக்கம் உயரக்கூடும் - சர்வதேச நாணய நிதியம் கணிப்பு!
மத்திய கிழக்கில் நடந்து வருகின்ற போர், உலகளாவிய பணவீக்கத்தினை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியினை மெதுவாக்குகின்றது என சர்வதேச நாணய நிதியத்தினுடைய நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் வெளியாகவுள்ள இந்த உலகளாவிய நிதி நிறுவனத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு முன்னதாக அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும், உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு செல்லும் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் முற்றுகையிட்டிருப்பது, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் இதுவரை இல்லாத மிக மோசமான இடையூறை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுளார்.

சர்வதேச நாணய நிதியம் தனது உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தை ஏப்ரல் 14 அன்று வெளியிடவுள்ளது.

போரின் தாக்கம் மற்றும் இறுக்கமான நிதி நிலைமைகள் பொருளாதார வளர்ச்சியை மந்தப்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் முன்னதாகவே எச்சரித்திருந்தனர்.

போரானது நிகழாமல் இருந்திருந்தால், பெருந்தொற்றிலிருந்து பொருளாதாரங்கள் மீண்டு வரும் நிலையில், 2026-ல் உலகப் பொருளாதார வளர்ச்சி 3.3% ஆகவும், 2027-ல் 3.2% ஆகவும் இருந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக திருமதி ஜார்ஜீவா மேலும் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now