மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்: 14 ஆவது நாளை எட்டியுள்...
News
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்: 14 ஆவது நாளை எட்டியுள்ள பதற்றம்!
கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அன்று தொடங்கிய அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல், இன்று 14 ஆவது நாளை எட்டியுள்ளதுடன், பிராந்தியம் முழுவதும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய முக்கியத் தகவல்கள் பின்வருமாறு,
தெற்கு லெபனானினுடைய நபதியா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பேரும், ஈரானின் மத்திய மாகாணமான மார்க்காசியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் உள்ள ஈரானின் கார்க் தீவிலுள்ள இராணுவ இலக்குகளினை தாக்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், வரும் நாட்களில் ஈரான் மீதான தாக்குதல்கள் தீவிரமடையும் எனவும்அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானின் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களினை சமாளிக்க, அமெரிக்க இராணுவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 10,000 இடைமறிப்பு ஆளில்லா வானூர்திகளினையும் நிறுவியுள்ளது.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களினைப் பற்றிய தகவல்களுக்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டொலர் வரைக்கும் சன்மானம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுடன் நீண்ட கால மோதலுக்குத் தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா தலைவரான நயீம் காசெம் அறிவித்துள்ளார்.
ஈரானில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் 'அல்-குட்ஸ்' தின அணிவகுப்பில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மற்றும் பாதுகாப்புச் சபை செயலாளரான அலி லாரிஜானி உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்று ஆதரவினைத் திரட்டியுள்ளனர்.
குறித்த மோதல் தொடங்கியதிலிருந்து, பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 42 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமையே இதற்கு முக்கியக் காரணம் எனவும் சர்வதேச எரிசக்தி முகமை எச்சரித்துள்ளது.