New Updates! Fresh news just arrived.

ஈரான் மீதான போர்: அமெரிக்காவிற்கு நாளொன்றுக்கு 890 மில்லி...

News

ஈரான் மீதான போர்: அமெரிக்காவிற்கு நாளொன்றுக்கு 890 மில்லியன் டொலர்கள் செலவு!

March 14, 2026 6:54 pm
ஈரான் மீதான போர்: அமெரிக்காவிற்கு நாளொன்றுக்கு 890 மில்லியன் டொலர்கள் செலவு!
ஈரானுக்கு எதிராக நடத்தப்படும் போருக்காக அமெரிக்கா நாளொன்றுக்கு 890 மில்லியன் டொலர்களை செலவிடுவதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வொஷிங்டனை தளமாகக் கொண்டு இயங்கும் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தினசரி வான்வழி நடவடிக்கைகளுக்காக 30 மில்லியன் டொலர்களும், கடற்படை நடவடிக்கைகளுக்காக 15 மில்லியன் டொலர்களும், தரைவழி நடவடிக்கைகளுக்காக 1.5 மில்லியன் டொலர்களும் செலவிடப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தம் ஆரம்பமான முதல் ஆறு நாட்களில் மட்டும் 11.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், "ஆபரேஷன் எபிக் பியூரி" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, அமெரிக்கா இதுவரை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளிலேயே அதிக செலவுமிக்க ஒன்றாக மாறியிருப்பது சிறப்பம்சமாகும்.

குறித்த அறிக்கையின்படி, பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான தாக்குதல்களின் முதல் 100 மணிநேரத்திற்கு மட்டும் 3.7 பில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளது. முதல் வாரத்தில் மட்டும் அமெரிக்க வரி வருவாயில் இருந்து 11 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக பென்டகன் காங்கிரஸிற்கு அறிவித்துள்ளது.

முன்னதாக, 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" நடவடிக்கைக்கு 2.26 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டது. அந்த நடவடிக்கை இரண்டரை மணிநேரம் மட்டுமே நீடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now