New Updates! Fresh news just arrived.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல்: எரிபொருள் விநியோகம் ...

News

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல்: எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

February 28, 2026 8:23 pm
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல்: எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
மத்திய கிழக்கில் நிலவுகின்ற போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினுடைய தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நிலவுகின்ற போர்ச் சூழலால் நாட்டினுடைய சில பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்வதினைக் காணமுடிகின்றது.

இது தொடர்ப்பில் கருத்துக்களை தெரிவித்த அவர், எரிபொருள் விநியோகத்தில் எந்தவித சிக்கலும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படுவதில்லை என்றும், எனவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் அச்சமடைவதற்கு எந்தவித காரணமும் இல்லை. கையிருப்பில் உள்ள முழுமையான அளவுகளினை நாங்கள் கணித்துள்ளோம். எம்மால் ஒரு மாத காலத்திற்குத் தடையின்றி இயங்க முடியும். எங்களிடமுள்ள மற்றும் தற்போது நாட்டை வந்தடைந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே, 37 நாட்களுக்கு தேவையான பெற்றோலும் மாற்று 35 நாட்களுக்கு தேவையான டீசலும் கையிருப்பிலுள்ளது.

அத்ஹதோடு, 47 நாட்களுக்கு தேவையான விமான எரிபொருளும் கையிருப்பிலுளளதாக அவர் குறிப்பிட்ட்டுள்ளார்.

மேலதிகமாக எந்தவொரு கப்பலும் வராவிட்டாலும் கூட, எம்மால் மேற் சொன்ன நாட்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி எரிபொருளினை விநியோகிக்க முடியும்.

அடுத்ததாக, நாம் இறக்குமதி செய்யும் பெட்ரோல், டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருவதில்லை. கப்பல் கட்டணம் மற்றும் தூரம் அதிகமாக இருப்பதினால் நாம் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகளில் இருந்தே இவற்றினை இறக்குமதி செய்கின்றோம். மசகு எண்ணெய் இறக்குமதியில் மட்டுமே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, இருப்பினும் எங்களிடமுள்ள கையிருப்பு ஒரு மாதத்திற்குப் போதுமானதாகும்.

எனவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now