New Updates! Fresh news just arrived.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள...

News

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

May 3, 2026 2:55 am
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டில் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில், தற்போது நாட்டிற்குள் போதைப்பொருள் கொண்டு வரப்படுவதினை கட்டுப்படுத்துவதற்கு பாரிய தடை நடவடிக்கைகளானது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு, முப்படைகள் மற்றும் காவல்துறையும் விசேட பங்களிப்பினை வழங்கியுள்ளதாகவும் கண்டியில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சினுடைய செயலாளர் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடும் எச்சரிக்கையினை விடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சினுடைய செயலாளர், அவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிச் செல்ல எவ்விதத்திலும் இடமளிக்கப் போவதில்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, வெளிநாடுகளில் பதுங்கியிருந்து, போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளினை முன்னெடுப்பவர்களைக் கைது செய்து, நாட்டிற்குக் கொண்டு வருவதற்குத் தேவையான இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையினுடைய அமைதி காக்கும் படையில் இலங்கையின் முப்படைகளினையும் மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக, மிக விரைவில் முப்படை உறுப்பினர்களினை ஹைட்டி நாட்டிற்கு அமைதி காக்கும் பணிகளுக்காக அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சினுடைய செயலாளர் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now