New Updates! Fresh news just arrived.

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்க...

News

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

April 29, 2026 4:29 pm
இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
நுகர்வோர் விவகார அதிகார சபையால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

அதாவது, இலங்கை சந்தையில் கிடைக்கும் பல தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் கன உலோகங்கள் இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்ததை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சோதனை செய்யப்பட்ட தயாரிப்புகள் கனரக உலோகங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை மீறி, நுகர்வோருக்கு கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தின.

பாதிக்கப்பட்ட தயாரிப்புகளினுடைய பட்டியல் மற்றும் அவற்றினுடைய பிராண்ட் பெயர்கள், அனுமதிக்கப்பட்ட உலோக செறிவுகளினை கோடிட்டுக் காட்டும் வர்த்தமானியின் நகளோடு, அதிகார சபை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 49 தயாரிப்புகளின் தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களினுடைய பட்டியலை அதிகார சபை வெளியிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளினை மீறும் கிரீம்கள் மற்றும் லோஷன்களினை வாங்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என நுகர்வோர் கடுமையாக அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

குறித்த தயாரிப்புகளினை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கையானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடுமையான அமலாக்கம் பின்பற்றப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் அறிவித்துள்ளது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now