New Updates! Fresh news just arrived.

மகாவலி கங்கை வடிநிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான எச்...

News

மகாவலி கங்கை வடிநிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான எச்சரிக்கை!

August 5, 2026 3:52 pm
மகாவலி கங்கை வடிநிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான எச்சரிக்கை!
அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி கங்கையின் கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் மழை பெய்யக்கூடும் எதிர்பார்க்கப்படும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அண்மையில் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய வெள்ளப் பெருக்கு நிலைமை யொன்று ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது.

இந்த எச்சரிக்கையானது, உடுநுவர, உடபலாத்த, யட்டிநுவர, தொலுவ, கங்கை இஹல கோரளை, கங்கவட்ட கோரளை மற்றும் ஹாரிஸ்பத்துவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட மகாவலி கங்கையை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளுக்குப் பொருந்தும். இப்பகுதிகளில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

எதிர்காலத்தில் மேலும் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால், பொது மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், உருவாகிவரும் நிலைமை குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now