New Updates! Fresh news just arrived.

ஆறுகளில் நீர்மட்டம் உயர்வு – வெள்ள அபாயம் இல்லை!

News

ஆறுகளில் நீர்மட்டம் உயர்வு – வெள்ள அபாயம் இல்லை!

September 16, 2026 8:26 am
ஆறுகளில் நீர்மட்டம் உயர்வு – வெள்ள அபாயம் இல்லை!
நாட்டின் பல பிரதான ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ள போதிலும், தற்போதைய நிலையில் எந்தவொரு ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. கின் கங்கை பகுதியில் சுமார் 125 மி.மீ., களு கங்கை மற்றும் கொழும்பைச் சுற்றிய பகுதிகளில் 75 முதல் 100 மி.மீ. வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கின், நிலவலா, களு ஆறுகள் மற்றும் அத்தனகலு ஓயாவில் நீர்மட்டம் அதிகரித்துள்ள போதிலும், அவை இன்னும் வெள்ள நிலையை எட்டவில்லை.

எனினும், தொடர்ந்தும் அதிக மழை பெய்யும் பட்சத்தில் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now