அனைத்து குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும் முடிவுகளை எடுக்க ...
News
அனைத்து குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும் முடிவுகளை எடுக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும்: ஹரிணி அமரசூரிய!
அரசியல் அல்லது தனிப்பட்ட காரணிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்த்து, அனைத்து குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும் முடிவுகளை எடுக்க வேண்டும் என புத்தளம் சாஹிரா முஸ்லிம் கல்லூரியில் நேற்று (17) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புத்தளம் சாஹிரா முஸ்லிம் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட பாடசாலையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தினை பிரதமர் தொடங்கி வைத்தார்.
பாடசாலையில் உயர்தர அறிவியல் பாடப்பிரிவினை தொடங்க ஒப்புதல் அளித்தது தொடர்பாக அதிபர் முன்வைத்த கருத்துக்களுக்கு பதிலளித்த பிரதமர், குழந்தைகளுக்கு அறிவியலில் மட்டுமல்ல, மற்ற அனைத்து பாடங்களிலும் அறிவு வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பிளவுபட்ட சமூகத்தை உருவாக்குவது அரசாங்கத்தினுடைய தத்துவம் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமசூரியா, குழந்தைகளுக்கு சிறந்ததைச் செய்ய வேண்டும் என்றும், அதற்காக எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பான திட்டங்களினை பாடசாலை மட்டத்தில் கூட்டாக விவாதிக்கப்பட்டு தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பாடசாலைகளாகப் பிரிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு வசதியான கல்வியினை வழங்குவது சாத்தியமில்லை என்றும், குழந்தைகளின் தேவைகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குரிப்பிட்டார்.
"கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளின் விளைவுகளினை இப்போது அனுபவித்து வருகின்றோம். ஆனால் இப்போது நமக்கு நல்ல நிகழ்காலம் உள்ளது. எனவே, இனிமேல், அரசியல் அல்லது தனிப்பட்ட காரணிகளின் அடிப்படையில் முடிவுகளினை எடுப்பதைத் தவிர்த்து, ஒட்டுமொத்த குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக முடிவுகளினை எடுக்க வேண்டும்." எனவும் தெரிவித்தார்.