இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலை நாமே ...
News
இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலை நாமே மூழ்கடித்தோம்: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு!
சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் ஏவப்பட்ட டொர்பிடோவைப் (Torpedo) பயன்படுத்தி ஈரானினுடைய கப்பல் ஒன்றிறை மூழ்கடித்துள்ளதிருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளரான பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும், குறித்த தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலின் பெயரினை அவர் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதேவேளை, 'IRIS Dena' என அழைக்கப்படும் ஈரானிய போர்க்கப்பல் ஒன்றினை இன்று (04) அதிகாலை இலங்கைக்கு தெற்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் இவ்வாறு விபத்துக்குள்ளாகிய நிலையில் மூழ்கியுள்ளதாகவும் இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இதன்படி, அதிகாலை வேளையில் குறித்த கப்பலில் இருந்து இலங்கை கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற அவசர உதவிக் கோரிக்கைக்கு அமைய, உடனடியாகச் செயற்பட்ட கடற்படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டடுள்ளனர்.
குறித்த விபத்து நிகழும் போது குறித்த கப்பலில் சுமார் 180 பேர் இருந்துள்ளதாகவும். அவர்களில் 32 பேர் இலங்கை கடற்படையினரால் உயிரோடு மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தற்போது காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
இருந்தபோதிலும், மூழ்கிய கப்பலில் இருந்த சுமார் 140 பேரினுடைய நிலை என்னவென்பது இதுவரைக்கும் தெரியவரவில்லை எனவும், மேலும் அவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.