New Updates! Fresh news just arrived.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு! ...

News

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு!

July 2, 2026 9:20 am
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு!
கல்பிட்டியிலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குத் திசையில் இருந்து வீசக் கூடும் எனவும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுவதாகவும் குறித்த திணைக்களம் முன்னறிவிப்பு செய்துள்ளது.

காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றினுடைய வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்தோடு, நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றினுடைய வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரைக்கும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரைக்குமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரைக்குமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுவாதாவும் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரைக்குமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரைக்கும் மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now