New Updates! Fresh news just arrived.

மழை மற்றும் காற்றுடனான வானிலை நாளை முதல் அதிகரிக்கும் - G...

News

மழை மற்றும் காற்றுடனான வானிலை நாளை முதல் அதிகரிக்கும்

August 5, 2026 4:15 pm
மழை மற்றும் காற்றுடனான வானிலை நாளை முதல் அதிகரிக்கும்
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காற்று நிலைமை நாளைய தினத்திலிருந்து எதிர்வரும் சில தினங்களுக்கு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன் , அந்த பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் கூடுதலாக பலத்த மழை பெய்யக்கூடும்.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது காற்று மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளிலும் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now