New Updates! Fresh news just arrived.

புதன்கிழமை விடுமுறை குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு ...

News

புதன்கிழமை விடுமுறை குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு

March 27, 2026 5:57 pm
புதன்கிழமை விடுமுறை குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு
நிலவும் விசேட சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புகளையும் நிறுத்துமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும், இது ஒரு கட்டாய உத்தரவு அல்ல என்றும், தற்போதைய நிலைமையைக் கையாள்வதற்காக விடுக்கப்பட்ட ஒரு வேண்டுகோள் மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எரிபொருள் பயன்பாட்டை முறையாக மேலாண்மை செய்யவும், அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் அரசாங்கம் அண்மையில் சில முக்கிய முடிவுகளை எடுத்திருந்தது.

அதன் அடிப்படையில் மறுஅறிவித்தல் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் அரசு அலுவலகங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் சட்டரீதியான நிறுவனங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் பாடசாலைகளுக்கும் பொருந்தும். அதன்படி அரசு, அரை-அரசு, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள், பாலர் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு புதன்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து அரச விழாக்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தனியார் துறையினர் முடிந்தவரை இணையவழியில் பணியாளர்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த விடுமுறை முறைமை சுகாதாரம், வங்கி, மின்சாரம், நீர், துறைமுகம், சுங்கம் மற்றும் விமான சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே, புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளைத் தவிர்க்குமாறு மேலதிகமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now