சதுப்புநிலங்கள் இயற்கையின் உயிருள்ள வடிகட்டிகள்; மாங்குரோ...
News
சதுப்புநிலங்கள் இயற்கையின் உயிருள்ள வடிகட்டிகள்; மாங்குரோவ் காடுகளைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம் - பேராசிரியர் எம்.எஸ். முகம்மட் நபீஸ்!
இலங்கையின் கடலோர மீன்பிடி உற்பத்தி கடந்த பல தசாப்தங்களாகக் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்து வருவதற்கு கரையோர நீர்நிலைகளில் அதிகரித்து வரும் மாசுபாடு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகக் கிழக்குப் பல்கலைக்கழக விவசாயப் பீடத்தின் விலங்கு விஞ்ஞானத் துறைப் பேராசிரியர் எம்.எஸ். முகம்மட் நபீஸ் தெரிவித்துள்ளார்.
சதுப்புநிலங்கள், கழிமுகங்கள் மற்றும் மாங்குரோவ் காடுகளைப் பாதுகாப்பதுடன், இயற்கையை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச உயிர்க்கோளக் காப்பகங்கள் தினத்தை முன்னிட்டு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீட உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பத் திணைக்களமும் இலங்கை தேசிய யுனெஸ்கோ ஆணைக்குழுவும் இணைந்து 2026 நவம்பர் 3ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்த விசேட கருத்தரங்கில் பிரதான உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
'Living Landscapes: Biosystems Solutions for Resilient Biosphere Reserves' (உயிரோட்டமுள்ள நிலப்பரப்புகள்: மீள்திறன் கொண்ட உயிர்க்கோளக் காப்பகங்களுக்கான உயிரியல் முறைமைகள் தீர்வுகள்) என்ற தொனிப்பொருளில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.
இலங்கையின் மொத்த மீன் உற்பத்தியில் 1960ஆம் ஆண்டுகளில் சுமார் 96 சதவீதப் பங்களிப்பை வழங்கிய கடலோர மீன்பிடித் துறையின் பங்கு தற்போது சுமார் 50 சதவீதமாகக் குறைந்துள்ளதாகத் தரவுகளுடன் விளக்கிய பேராசிரியர் முகம்மட் நபீஸ், நாட்டின் நீர்வளச் சூழல் எதிர்கொண்டுள்ள பாதிப்புகளின் தீவிரத்தை இது எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
சதுப்புநிலங்கள், கழிமுகங்கள் மற்றும் மாங்குரோவ் காடுகள் வெறுமனே நீர்நிலைகளாகவோ தாவரங்கள் நிறைந்த பகுதிகளாகவோ கருதப்படக்கூடாது. அவை இயற்கையின் நீர் சுத்திகரிப்பு முறைமைகளாகச் செயற்படும் உயிருள்ள வடிகட்டிகளாகும்.
சதுப்புநிலங்கள் மற்றும் கழிமுகங்கள் ஊடாக நீர் மெதுவாகப் பாயும்போது அதன் வேகம் குறைவதுடன், நீரில் கலந்திருக்கும் மாசுப்பொருட்கள் வண்டல் படிவுகளாகத் தேங்குகின்றன. இதன்மூலம் நீரின் தரத்தை இயற்கையாக மேம்படுத்துவதில் இச்சூழல் முறைமைகள் முக்கிய பங்காற்றுகின்றன.
ஆனால், சதுப்புநிலங்களை அழித்தல், கழிமுகங்களை மாசுபடுத்துதல், விவசாய நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், நகரமயமாக்கல், முறையற்ற கழிவு முகாமைத்துவம் மற்றும் கழிவுகளை நேரடியாக நீர்நிலைகளில் கொட்டுதல் போன்ற மனிதச் செயற்பாடுகள் இயற்கையின் சுயசுத்திகரிப்பு ஆற்றலைச் சீர்குலைத்து வருகின்றன.
இதன் விளைவாக நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள் பாதிக்கப்படுவதுடன், மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளாகின்றன. இதனால் மீன்பிடி வளங்களும் உற்பத்தித் திறனும் வீழ்ச்சியடைகின்றன. இது சுற்றுச்சூழல் பிரச்சினையாக மட்டுமன்றி, கடலோரப் பகுதிகளில் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூக நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினையாகவும் உள்ளது.
நீர்நிலை மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சூழல் முறைமைகளை மீளுருவாக்குவதற்கும் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட பொறியியல் தீர்வுகளைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, செயற்கை மிதக்கும் சதுப்புநிலங்களை (Floating Treatment Wetlands) உருவாக்குதல், மாங்குரோவ் அல்லது கண்டல் தாவரங்களை மீள்நடுகை செய்தல், உயிரியல் வடிப்பான்களை (Biofilters) அமைத்தல் போன்ற நடைமுறைத் தீர்வுகள் மூலம் மாசடைந்த நீர்நிலைகளின் தரத்தை மேம்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் வரவேற்புரையை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பத் திணைக்களத் தலைவருமான பேராசிரியர் ஏ.டி.என்.ஆர். குமார நிகழ்த்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3ஆம் திகதி சர்வதேச உயிர்க்கோளக் காப்பகங்கள் தினம் அனுஷ்டிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், 2021ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் பொதுமாநாட்டில் இத்தினம் ஸ்தாபிக்கப்பட்டு, 2022ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
உயிர்க்கோளக் காப்பகங்கள் என்பவை காடுகள், வனவிலங்குகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பகுதிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல. உயிரியல் பல்வகைமைப் பாதுகாப்பு, நிலைபேறான அபிவிருத்தி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உள்ளூர்ச் சமூகங்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முக்கியமான சூழல் முறைமைகளாக அவை விளங்குகின்றன என்றும் குறிப்பிட்டார்.
காலநிலை மாற்றம், உயிரியல் பல்வகைமையின் வீழ்ச்சி, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் நிலச் சீரழிவு போன்ற சவால்களை எதிர்கொள்வதற்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களைப் பயன்படுத்தி நடைமுறைத் தீர்வுகளை உருவாக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி ஆர்.கே. அஹமட் றிபாய் காரியப்பர் சார்பில் உரையாற்றிய தகவல் தொழில்நுட்பத் துறையின் துறைத்தலைவர் எம்.ஜெ. அகமட் சபானி, பொருளாதார வளர்ச்சி, நவீனமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் சம அளவிலான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புவியியல் தகவல் முறைமைகள் (GIS), செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். காடுகள் மற்றும் கரையோரச் சூழல் முறைமைகளைக் கண்காணித்தல், உயிரியல் பல்வகைமையின் நிலைமைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் நீர்வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் போன்ற செயற்பாடுகளில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.
கருத்தரங்கைத் தொடர்ந்து உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பட்டதாரி மாணவர்களுக்காக