New Updates! Fresh news just arrived.

2026ஆம் ஆண்டுக்கான உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகள...

News

2026ஆம் ஆண்டுக்கான உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகள் எப்போது? வெளியானது மற்றுமொரு அறிவிப்பு

April 1, 2026 1:05 pm
2026ஆம் ஆண்டுக்கான உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகள் எப்போது? வெளியானது மற்றுமொரு அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில், கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிட்ட திகதிகளிலேயே நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

நேற்று (மார்ச் 31) உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

2026ஆம் ஆண்டுக்கான பிரதான பரீட்சைகள் பின்வரும் திகதிகளில் ஆரம்பமாகவுள்ளன.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 2026 ஓகஸ்ட் 09
க.பொ.த உயர்தரப் பரீட்சை: 2026 ஓகஸ்ட் 10
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: 2026 டிசம்பர் 08

"கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் பரீட்சை திகதிகள் மாற்றமடைந்ததால் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதனைத் தவிர்க்கவே 2025 செப்டம்பர் மாதமே 2026க்கான திகதிகள் அறிவிக்கப்பட்டன. எனவே, மாணவர்கள் அந்தந்த திகதிகளுக்கு அமையத் தங்களது கல்வி நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்," என அவர் மேலும் குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெறும்.

அத்துடன், இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் இன்று (ஏப்ரல் 01) ஆரம்பமாகின்றன.

மூன்றாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 30 முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now