அருகம்பையில் காட்டு யானை தாக்குதல்: வெளிநாட்டுச் சுற்றுலா...
News
அருகம்பையில் காட்டு யானை தாக்குதல்: வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி படுகாயம்!
அம்பாறை மாவட்டத்தின், பொத்துவில் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அருகம்பை - சின்ன உள்ளை பகுதியில் காட்டு யானை தாக்கியமையால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி படுகாயமடைந்துள்ளார்.
இதன்படி, நேற்று (28) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அருகம்பை மற்றும் சின்ன உள்ளை போன்ற பகுதிகள் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக விளங்கும் நிலையில், தினசரி ஏராளமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நடமாடுகின்ற பகுதிகளாகவும் காணப்படுகின்றன.
இத்தகைய மக்களினுடைய நடமாட்டம் மிகுந்த குடியிருப்பு மற்றும் சுற்றுலா மண்டலங்களுக்குள் அண்மைக்காலமாகக் காட்டு யானைகளினுடைய வருகையும் நடமாட்டமும் அதிகரித்துள்ளமையால் குறித்த பகுதியில் பெரும் அச்சநிலையானது நிலவுகின்றது.
ஆகவே, அருகம்பை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பயணிக்கின்ற வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வீதிகளில் பயணிக்கின்ற போது மிகுந்த அவதானத்தோடு, இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்தோடு, வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள், பொலிஸாரும் உடனடியாக தலையிட்டு, குடியிருப்பு மற்றும் சுற்றுலாப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் ஊடுருவுவதினை தடுத்து நிறுத்தத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளினை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாறுக் ஷிஹான்