New Updates! Fresh news just arrived.

தந்தமொன்றை இழந்த நிலையில் காட்டு யானை சடலமாக மீட்பு! - Gu...

News

தந்தமொன்றை இழந்த நிலையில் காட்டு யானை சடலமாக மீட்பு!

November 1, 2026 8:16 pm
தந்தமொன்றை இழந்த நிலையில் காட்டு யானை சடலமாக மீட்பு!
கஹடகஸ்திகிலிய, மீமின்னாவல பகுதியில் உள்ள காயன்கொல்லாவ குளத்தை ஒட்டிய வயல்வெளியை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கஹடகஸ்திகிலிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளினால் இந்த யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், கண்டெடுக்கப்பட்ட போது யானையின் இடதுபுறத் தந்தம் காணப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

யானையின் இடது தந்தம் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இந்த யானை சில நாட்களுக்கு முன்பாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் கஹடகஸ்திகிலிய வனஜீவராசிகள் அலுவலகம், திவுல்வெவ பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காவன்திஸ்ஸ தந்த யானை உயிரிழந்து ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், மீண்டும் ஒரு தந்த யானை இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now