New Updates! Fresh news just arrived.

வயலில் உயிரிழந்த காட்டு யானை: பிரேதப் பரிசோதனை திங்கட்கிழ...

News

வயலில் உயிரிழந்த காட்டு யானை: பிரேதப் பரிசோதனை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு!

October 24, 2026 10:43 pm
வயலில் உயிரிழந்த காட்டு யானை: பிரேதப் பரிசோதனை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு!
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியில் நெல் வயலில் விழுந்து அவதிப்பட்டு வந்த காட்டு யானை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு வனவிலங்கு மண்டலத்தின் அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் இயங்கும் வளத்தாப்பிட்டி களப் பாதுகாப்பு அரணின் சம்மாந்துறை பிரிவு எண் 4-இல் உள்ள பகுதியில்இ கடந்த 21 ஆம் திகதி காலை காட்டு யானையொன்று நெல் வயலில் வீழ்ந்துள்ளது.

தொடர்ந்து, குறித்த யானைக்கு வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளால் தொடர்ச்சியான சிகிச்சைகளும் பராமரிப்புகளும் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று(24) அதிகாலை சுமார் 2.00 மணியளவில் அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது.உயிரிழந்த காட்டு யானையானது சுமார் 15 வயதுடைய ஆண் யானை என வனவிலங்கு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இக்காட்டு யானை வீழ்ந்துள்ளமைக்கான காரணம் குறித்துக் கருத்துத் தெரிவித்த கிழக்கு வனவிலங்கு கால்நடை மருத்துவர் நிஹால் புஷ்பகுமார குப்பைகளை உட்கொண்டதனால் ஏற்பட்ட கடுமையான நோய் நிலையே யானையின் இந்த நிலைக்குக் காரணம் என்று தெரிவித்தார்.

வலத்தபிட்டிய வனவிலங்கு சரணாலயப் பாதுகாப்பு அலுவலகத்தின் களக் காவலர் அஜித் குணரத்ன தலைமையிலான குழுவினர், யானையைக் காப்பாற்றுவதற்காகவும் அதற்குத் தேவையான உணவுகளை வழங்குவதற்காகவும் இரவும் பகலாகத் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதனை மீட்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.

யானை இன்று அதிகாலை உயிரிழந்த போதிலும், அதன் உடற்கூற்றுப் பரிசோதனை (பிரேதப் பரிசோதனை) வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுப்பு எடுத்தமையே குறித்த தாமதத்திற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை நிருபர் - பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now