எரிபொருள் விலை குறையுமா? அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல...
News
எரிபொருள் விலை குறையுமா? அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் Nalinda Jayatissa தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நிலைமை இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படாத காரணத்தால், எரிபொருள் விலை குறைக்கப்படும் காலத்தை தற்போது உறுதியாகக் கூற முடியாது என குறிப்பிட்டார்.
இந்த மாதத்திற்காக முற்பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான எரிபொருள் கப்பல்கள் ஏற்கனவே நாட்டை வந்தடைந்துள்ளதுடன், மேலும் ஒரு மசகு எண்ணெய் கப்பல் மாத்திரமே வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்ட பின்னர், உலக பொருளாதாரத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் நன்மைகள் இலங்கை போன்ற நாடுகளுக்கும் கிடைக்கும் பட்சத்தில் அவை மக்களுக்கும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
மேலும், எரிபொருள் மானியத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், உலக சந்தை மாற்றங்களை கவனமாக அவதானித்த பின்னரே இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலக சந்தையில் ஏற்படும் சாதகமான மாற்றங்களின் பலன்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும், நாட்டின் பொருளாதார செயற்பாடுகளை சீராக முன்னெடுக்க எரிபொருள் நிவாரணங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.