New Updates! Fresh news just arrived.

பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? பரீட்சைகள் திணைக்களம் வெளிய...

News

பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விளக்கம்

March 28, 2026 11:55 am
பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விளக்கம்
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐந்தாமாண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து பரீட்சைகள் திணைக்களம் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளர்.

இது குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படலாம் என்ற கருத்து மாணவர்களிடையே நிலவுகின்றது. ஆனால் பரீட்சைகள் திணைக்களம் அதுபோன்ற எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளில் பரீட்சைகளை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2026ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் ஏப்ரல் 24ஆம் திகதி வரை இணையவழியில் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, அனைத்து விண்ணப்பதாரர்களும் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று, அங்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடசாலை அதிபர் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தியும் தனித்தனியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now