New Updates! Fresh news just arrived.

எரிபொருளுக்கான கியூ.ஆர் முறைமை நீக்கப்படுமா? விடுக்கப்பட்...

News

எரிபொருளுக்கான கியூ.ஆர் முறைமை நீக்கப்படுமா? விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

April 10, 2026 2:11 pm
எரிபொருளுக்கான கியூ.ஆர் முறைமை நீக்கப்படுமா? விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
பண்டிகைக்காலம் முடியும் வரை அடுத்த இரண்டு வாரங்களுக்கு எரிபொருளுக்கான கியூஆர் (QR) முறையை நீக்குமாறு இலங்கை பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

புத்தாண்டுக்காகத் தங்கள் கிராமங்களுக்குப் பயணம் செய்யும் மக்களுக்குப் போதுமான எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டி.வி சாந்த சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அவ்வாறு செய்யாவிட்டால், புத்தாண்டு காலத்தில் மக்கள் அவதிப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், எரிபொருள் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now