பூநகரியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் தி...
News
பூநகரியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டம்: நேரடியாகப் பார்வையிட்டார் சிறீதரன் எம்.பி!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரிப் பகுதியில் பொதுமக்களினுடைய காணிகளை அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்காகக் கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களினை நேரில் சென்று பார்வையிட்டதோடு, காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார்.
பூநகரி பகுதியில் பொதுமக்களினுடைய எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டத்தினை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த திட்டத்தினால் பயன்தரும் நிலையிலுள்ள 5000-க்கும் அதிகளவிலான தென்னை மரங்கள் அழிக்கப்படுவதோடு, அதனை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களினுடைய வாழ்வாதரமும் முற்றுமுழுதாகப் பாதிக்கப்படும்.
கள விஜயத்தின் பின்பு, கிராஞ்சி ஒருங்கிணைந்த சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்களோடு நாடாளுமன்ற உறுப்பினர் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இதன் போது, அடுத்து மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் சம்பந்தமாகவும், தொடர் நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதன்போது, பூநகரி பிரதேச சபையினுடைய தவிசாளர் திரு. சிவகுமார் சிறீரஞ்சன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினுடைய தவிசாளர் சட்டத்தரணி திரு. சுப்பிரமணியம் சுரேன் மற்றும் பூநகரி பிரதேச சபை உறுப்பினரான திரு. கண்ணதாசன், கட்சியின்னுடைய செயற்பாட்டாளர் திரு. குபேந்திரன் ஆகியோரோடு, ஒருங்கிணைந்த சமூக மட்ட அமைப்புகளினுடைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
பு.கஜிந்தன்