ஆசிரியர்களின் உரிமைகள், தொழில்சார் நலன்கள் குறித்து கவனம்...
News
ஆசிரியர்களின் உரிமைகள், தொழில்சார் நலன்கள் குறித்து கவனம் செலுத்தும் வகையில்: மக்கள் ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண மாநாடு!
மக்கள் ஆசிரியர் சங்கத்தின் 2026ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண மாநாடு இன்று (24) சம்மாந்துறையில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான இணைப்பாளர் ஏ.ஜே.எம். அமானுல்லாஹ்வின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.
மக்கள் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாணத் தலைவர் எல். தியாகராஜ் தலைமையில் சம்மாந்துறை தனியார் உணவக மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாடு, ஆசிரியர்களை ஒன்றிணைத்து அவர்களின் தொழில்சார் நலன்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தும் நோக்கில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் எஸ். மோகன், செயலாளர் ஆர். நெல்சன் மோகன்ராஜ், பொருளாளர் என். பிரபாகரன், உப செயலாளர் ஆர். மனோகரன், செயற்குழு உறுப்பினர் பி. மகேந்திரன், கிழக்கு மாகாணச் செயலாளர் எம்.ஐ.எம். சனுஸ், சப்ரகமுவ மாகாணத் தலைவர் எஸ். செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆசிரியர்களின் தொழில்சார் உரிமைகளைப் பாதுகாத்தல், ஆசிரியர்களின் நலன்களை மேம்படுத்துதல், கல்வித்துறையில் காணப்படும் சவால்களுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளுதல், ஆசிரியர்களுக்கும் கல்வி நிர்வாகத்துக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் செயற்பாடுகளை விரிவுபடுத்துதல் போன்ற விடயங்கள் இம்மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியில் ஆசிரியர்களின் பங்களிப்பை வலுப்படுத்துதல், ஆசிரியர்களின் தொழில்சார் பிரச்சினைகளை உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லுதல் மற்றும் ஆசிரியர் சமூகத்தின் ஒற்றுமையை மேம்படுத்துதல் தொடர்பிலும் இம்மாநாட்டின் ஊடாக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
ஆசிரியர்களின் தொழில்சார் முன்னேற்றத்தையும் நலன்களையும் மையப்படுத்தி, சங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஒன்றுகூடலாக இம்மாநாடு அமைந்திருந்தது.
நூருல் ஹுதா உமர்