ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய ச...
News
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை!
யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதத்தில் 1.475 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபா தண்டப்பணத்தினை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று (21) தீர்ப்பளித்துள்ளார்.
வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபரின் சார்பில் ஆஜராகியிருந்த அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன், அதிகரித்து வரும் போதை பொருள் தொடர்பிலான குற்றங்கள் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குகளினை மேற்கோள்காட்டி போதை பொருள் குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனையை வழங்க வேண்டும் என சமர்ப்பனங்களினை மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 12 மாத காலம் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட பல வருடங்கள் கடக்கும் இக்காலத்தில் மிக குறுகிய காலத்தில் யாழ் நீதிமன்றில் வழக்குகள் முடிக்கப்பட்டு குற்றவாளிகள் மீண்டும் குற்றத்தினை செய்ய நினைக்க கூட பயப்படும் தண்டனைகளினை யாழ் நீதிமன்றம் விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.
போதை பொருள் குற்றச்சாட்டுகளினை கட்டுப்படுத்தும் குறித்த நடவடிக்கைகள் வரவேற்கப்பட கூடியதாகும்.
தண்டனைகள் அதிகரிக்கப்படின் குற்றங்கள் குறைக்கப்படும் என்னும் நிலையில் இனி போதைபொருள் குற்றங்களுக்கு இலகு தண்டனைகளை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்கின்ற நிலை உருவாகியுள்ளமை யாழ் பிராந்திய மக்களினால் வரவேற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த வாரமும் 1.4g போதைப்பொருளினை உடமையில் வைத்திருந்த நபருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.
பு.கஜிந்தன்