மகளிர் தின விசேட அழைப்பு: பிரதமர் ஹரிணி மணிலா நோக்கி பயணம...
News
மகளிர் தின விசேட அழைப்பு: பிரதமர் ஹரிணி மணிலா நோக்கி பயணம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று நள்ளிரவு பிலிப்பைன்ஸின் மணிலா நோக்கி பயணமானார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்த விசேட அழைப்புக்கு அமைய, பிரதமரின் இந்த உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெற்றுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்விஜயத்தின்போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின பிரதான நிகழ்வில் பிரதமர் உரையாற்றவுள்ளார். அத்துடன் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் அமைச்சர்களுடனும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளதாகவும் பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.