New Updates! Fresh news just arrived.

பெண்கள் சந்தை மற்றும் வீதியோர சிறு வணிக நிலையங்கள் பரிசோத...

News

பெண்கள் சந்தை மற்றும் வீதியோர சிறு வணிக நிலையங்கள் பரிசோதனை: நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்கள் பறிமுதல்!

April 30, 2026 7:46 pm
பெண்கள் சந்தை மற்றும் வீதியோர சிறு வணிக நிலையங்கள் பரிசோதனை: நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்கள் பறிமுதல்!
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண்கள் சந்தை மற்றும் வீதியோர சிறு வணிக நிலையங்கள் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் தலைமையில் இப்பரிசோதனைகளை அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர்.

இந்த பரிசோதனையின் போது, நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டதுடன், பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வியாபாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் எமது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் கலந்துகொண்டு செயற்பாடுகளை திறம்பட முன்னெடுத்தனர்.

இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now