யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு தமிழிச...
News
யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு!
முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது.
இன்றைய நிகழ்வின்போது மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நேற்றையதினம் ஆரம்பமான இந்த மாநாட்டில் ஆய்வளிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பின்னர் இன்றைய தினம் மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இசைத் துறையின் வரலாற்றில் ஒரு மைக்கல்லாக இந்த முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு நடாத்தப்படுகிறது.
கந்தையா கார்த்திகேசு நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் இந்த ஆய்வு மாநாடானது நடைபெற்றது.
சே.பொ.இ.கா.ஆ.க. பீடத்தின் இசைத்துறை தலைவர் கலாநிதி சி. சூரியகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக முதுநிலைப் பேராசிரியரும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருமான தி. வேல்நம்பியும், மாநாட்டு முதன்மைக் கருத்துரைஞராக முனைவர் அரிமளம் பத்மநாபனும் கலந்து சிறப்பித்ததுடன் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் இதிலா கலந்துகொண்டனர்.
பு.கஜிந்தன்