யாழில் நூற்றாண்டு கண்ட பாடசாலை - சிறப்பாக விழா எடுத்த பாட...
News
யாழில் நூற்றாண்டு கண்ட பாடசாலை - சிறப்பாக விழா எடுத்த பாடசாலை சமூகம்!
யாழ். வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆரம்பத்தில் திருஞானசம்பந்தர் வித்தியாசாலை என்று ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் ஆரம்ப பிரிவு மாத்திரமே காணப்பட்டது. அதனை தொடர்ந்து வட்டு மத்திய கல்லூரியானது ஸ்தாபிக்கப்பட்டது.
அந்தவகையில் ஆரம்ப பிரிவு திருஞானசம்பந்தர் வித்தியாசாலையிலும், இடைநிலை மற்றும் உயர்தர பிரிவானது வட்டு மத்திய கல்லூரியிலும் காணப்படுகிறது.
இன்றைய நூற்றாண்டு விழாவின்போது திருஞானசம்பந்தர் வித்தியாசாலையில் இருந்து மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க, நடை பவனி ஒன்று வட்டு மத்திய கல்லூரிவரை முன்னெடுக்கப்பட்டது.
பின்னர் கல்லூரியில் அமைந்துள்ள சரஸ்வதி திருவுருவச் சிலைக்கு நிறுவுனரின் பரம்பரை வழிவந்தவர்கள் மலர்மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டதை தொடர்ந்து இறைவணக்கம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒளி தீபத்தை ஏந்தியவாறு மேடையை அலங்கரித்தனர்.
தொடர்ச்சியாக வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரை, மாணவர்களினதும் பழைய மாணவர்களினதும் கலை நிகழ்வுகள், பட்டி மன்றம் பிரத விருந்தினர் உரை என்பன இடம்பெற்று, நன்றியுரையுடன் விழா நிகழ்வுக்கு வந்தது.
கல்லூரியின் முதல்வர் வதனி தில்லைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாக ஸ்தாபகர் குடும்பத்தை சேர்ந்த திரு. திருமதி வெற்றிவேல்பிள்ளை கலந்து சிறம்பித்ததுடன், பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள் - ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
பு.கஜிந்தன்