சீமானை ஆதரித்து யாழில் மாட்டு வண்டி ஊர்வலம்!
News

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியினுடைய தலைவர் சீமானுக்கு ஆதரவாக பதாகைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று (22) மானிப்பாயில் மாட்டு வண்டி ஊர்வலம் ஒன்றும் இடம்பெற்றது. மானிப்பாய் பிரதேச சபையினுடைய உறுப்பினர்கள் இணைந்து இதனை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது நாம் தமிழர் கட்சி சின்னம் மற்றும் செந்தமிழன் சீமானினுடைய உருவப்படம் அடங்கிய ஆடையினை அணிந்து, சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகையினை மாட்டு வண்டியில் கட்டி, ஏரினை சுமந்தவாறு மாட்டுவண்டி ஊர்வலம் இடம்பெற்றது.
மானிப்பாய் பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பித்த குறித்த ஊர்வலமானது மருதடி விநாயகர் ஆலயம்வரைக்கும் சென்றது.
பு.கஜிந்தன்