New Updates! Fresh news just arrived.

யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

News

யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

May 16, 2026 6:08 pm
யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!
இரணம் மிகுந்த இந்த மே மாதத்தில் மண்ணில் பட்ட வலிகளினை கடத்தும் முனைப்புடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வானது இன்று (16) காலை மானிப்பாய் பொதுச்சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.

சந்தை வர்த்தகர்களினுடைய ஆதரவில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கலொக் கணநாதன் உஷாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரான கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் இறுதி யுத்தத்தின் போது வன்னியில் அவலங்களினை சுமந்த மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கி வைத்தனர்.

பெருமளவான மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டதுடன் தமது பிள்ளைகளுக்கு வரலாற்றினை இதன் போது கடத்தியமையை அவதானிக்கமுடிந்தது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now