யாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு: சிறுவன் பலி!
News

இன்று (10) அதிகாலை ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரினால் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 17 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்று அதிகாலை குறித்த சிறுவனுட்பட மூவர் அல்லைப்பிட்டி பகுதியால் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவேளை வீதி கடமையில் இருந்த பொலிஸார் அவர்களினை வழி மறித்தனர். பொலிஸாரினுடைய சமிக்ஞையை மீறி பயணித்தமையினால் பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளனர்.
குறித்த துப்பாக்கி சூட்டில் சித்தங்கேணியினை சேர்ந்த குறித்த சிறுவன் பலியாகியுள்ளதுடன், அவருடன் சென்ற நல்லூர் மற்றும் வட்டுக்கோட்டை பகுதிகளினை சேர்ந்த இருவர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் விசாரணைகளின் பின்னர் அவர்களினை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்