New Updates! Fresh news just arrived.

யாழில் சோபையிழந்தது புத்தாண்டு வியாபாரம்!

News

யாழில் சோபையிழந்தது புத்தாண்டு வியாபாரம்!

April 13, 2026 5:25 pm
யாழில் சோபையிழந்தது புத்தாண்டு வியாபாரம்!
தமிழ் - சிங்கள புத்தாண்டினை கொண்டாடுவதற்கு மக்கள் நாடளாவிய ரீதியில் தயாராகி வருகின்றனர்.

அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு பண்டங்கள், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தேவையான இதர பொருட்களை கொள்வனவு செய்து நாளை புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர்.

மேலும், பொருட்களின் விலைகள் அதிகமாக இருப்பதால் அவற்றை கொள்வனவு செய்வதில் நாங்கள் கஷ்டத்தை எதிர்கொள்வதாக மக்கள் கூறுகின்றனர். இதேவேளை எரிபொருள் விலையேற்றம், எரிவாயு விலையேற்றம் என்பன புத்தாண்டை சந்தோஷமாக கொண்டாட தடையாக உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.

அதேவேளை தமது வியாபாரம் இந்த ஆண்டு புத்தாண்டுக்கு சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மக்களிடம் பணம் இல்லாததால் அவர்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அதனால் வியாபாரம் சுமாராக இடம்பெறுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now