New Updates! Fresh news just arrived.

சொகுசு வாகனத்தில் கஞ்சா கடத்திய இளம் ஜோடி கைது

News

சொகுசு வாகனத்தில் கஞ்சா கடத்திய இளம் ஜோடி கைது

August 10, 2026 7:53 pm
சொகுசு வாகனத்தில் கஞ்சா கடத்திய இளம் ஜோடி கைது
கஞ்சா கடத்திய இளம் ஜோடி ஒன்றைஆரச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்து உள்ளனர்.

இவர்கள் புத்தளம் சிலாபம் வீதியின் பத்துளு ஓய பொலிஸ் வீதித் தடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து சுமார் 17 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

26 வயதுடைய ஆண் ஒருவரும் 22 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் ராஜாங்கனை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.

கஞ்சா செடிகள் தனமல்வில எனும் பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டவை என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now