அபாயகரமான முறையில் வாகனம் செலுத்திய இளைஞர் கைது!
News

கட்டுநாயக்கவின் ஹீனதியான பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு விழாவின் போது அபாயகரமான முறையில் வாகனம் செலுத்திய, இளைஞர் ஒருவரை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தாண்டு விழாவின் போது நடைபெற்ற மிதிவண்டிப் பந்தயத்திற்கு முன்னால் அபாயகரமாகச் சென்ற ஒரு கார், பந்தயத்தைக் காண சாலையின் இருபுறமும் கூடியிருந்த பொதுமக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் சேதம் விளைவித்ததைக் காட்டும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அந்தக் காணொளி தொடர்பாக கட்டுநாயக்க பொலிஸ் நிலையம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இளைஞரும் காரும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மினுவாங்கொடவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஆவார்.
சம்பந்தப்பட்ட சந்தேக நபர், மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மே 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.