New Updates! Fresh news just arrived.

27 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

News

27 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

November 19, 2026 11:40 am
27 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை ஜும்மா பள்ளிவாசல் பகுதியில் 27 கிராம் 140 மில்லிகிராம் ஐஸ் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளுடன் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் புதன்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கல்முனைப் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த இளைஞரைச் சோதனையிட்டுள்ளனர். இதன்போது, அவரது உடைமையிலிருந்து 27 கிராம் 140 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now