New Updates! Fresh news just arrived.

பாரியளவான போதைப்பொருட்களுடன் இளைஞர் கைது!

News

பாரியளவான போதைப்பொருட்களுடன் இளைஞர் கைது!

May 9, 2026 3:12 pm
பாரியளவான போதைப்பொருட்களுடன் இளைஞர் கைது!
மாதிவெல பகுதியில் வைத்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களோடு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோகிராம் 58 கிராம் ஹெரோயின் மற்றும் 3 கிலோகிராம் 34 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள 26 வயதுடைய சந்தேகநபர் மாதிவெல பகுதியினை சேர்ந்தவர் என்பதுடன்,மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் இது குறித்து மேலதிக விசாரணைகளினை முன்னெடுத்து வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now