New Updates! Fresh news just arrived.

யாழில் ஹெரோயினை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்திய...

News

யாழில் ஹெரோயினை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!

May 13, 2026 4:09 pm
யாழில் ஹெரோயினை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!
யாழில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கிய நிலையில் 21 வயதுடைய இளைஞர் ஒருவரை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - கல்லவேம்படி பகுதியினை சேர்ந்த குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்று (12) 2 கிராம் ஹெரோயினுடன் கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று பொலிஸ் தடுப்பு காவலில் வைத்த நிலையில் இன்று காலை அவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின்னரே, பொலிஸார் தன்னை கைது செய்ய வரும்போது 10 கிராம் எடையுடைய ஹெரோயை பொலுத்தீன் பையோடு விழுங்கிய விடயத்தினை கூறியுள்ளார்.

பின்னர் பொலிஸார் அவரை சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த இளைஞனை இதற்கு முன்னரும் போதைப்பொருளோடு கைது செய்யப்பட்டு அவருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now