நெல்லியடியில் 4 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இள...
News
நெல்லியடியில் 4 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
வடமராட்சி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சுமார் 4 இலட்சம் ரூபா சந்தை பெறுமதி கொண்ட போதை மாத்திரைகளுடன் 21 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்
அரச வேவுச் சேவைக்கு (State Intelligence Service) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, இன்று (2026.04.04) வடமராட்சி பகுதியில் இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, கரணவாய் பகுதியைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் வியாபாரி என அடையாளம் காணப்பட்ட இளைஞன் ஒருவரை நெல்லியடி பொலிஸார் கைது செய்தனர்
கைப்பற்றப்பட்ட பொருட்கள் சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 520 Pregabalin போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் தற்போதைய கறுப்புச் சந்தை மதிப்பு சுமார் 4 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது
மேலதிக நடவடிக்கை;
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நெல்லியடி பொலிஸார், அவரை நாளை (2026.04.05) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்
வடமராட்சி பகுதியில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் அதிகரித்து வரும் நிலையில், பொலிஸார் மற்றும் புலனாய்வுத் துறையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பூ.லின்ரன்