'ஐஸ்' போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
News
'ஐஸ்' போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்த அதிரடிச் சோதனையின் போது, 3,920 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளோடு, 23 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தொட்டம பகுதியில் அம்பாறை பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளினால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொட்டம கிராமத்தினை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார். இவர் தொட்டம மற்றும் பன்னல்கம ஆகிய பகுதிகளில் மிக நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தினை செத்துவருவதுவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகத் தமன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
பாறுக் ஷிஹான்