New Updates! Fresh news just arrived.

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது: நீதிமன்றில் ஆஜர்படுத்த ந...

News

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது: நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை!

August 2, 2026 8:34 pm
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது: நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை!
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் 'ஐஸ்' போதைப்பொருளினை சூட்சுமமான முறையில் இளைஞர்களுக்கு விநியோகித்து வந்த 32 வயதுடைய நபர் ஒருவரினை இன்று (02) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவினுடைய பொறுப்பதிகாரி என். றிபாய்டீனுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கைதான சந்தேகநபரிடம் இருந்து 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி மற்றும் நிறுத்தல் தராசு,பிளாஸ்டிக் குழாய்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு 3 பிடி விறாந்துகள் உள்ள நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now