வட்டுக்கோட்டையில் இளைஞன் படுகொலை: மற்றொரு இளைஞர் படுகாயம்...
News
வட்டுக்கோட்டையில் இளைஞன் படுகொலை: மற்றொரு இளைஞர் படுகாயம்!
புதுவருட கொண்டாட்டத்திற்காக கொழும்பில் இருந்து தனது வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர் நேற்றிரவு நக்கிள்ஸால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொல்புரம், சித்தம்பி கோவிலடியை சேர்ந்த கோணேஸ்வரன் மயூரன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், ரஜீவன் (வயது 26) என்பவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
ஒரே ஊரினை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கிடையே கடந்த 2021ஆம் ஆண்டு தொடக்கம் முரண்பாடு காணப்படுகின்றது. இந்நிலையில் உயிரிழந்த இளைஞர் கொழும்பில் வேலை செய்துவரும் நிலையில் வருட கொண்டாட்டத்திற்காக நேற்றையதினம் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதன்போது மீண்டும் முறுகல் ஆரம்பமானது. இதன்போது இரண்டு தரப்பில் இருந்தும் இருவர், இருவர் என நால்வருக்கிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இதன்போது உயிரிழந்த நபர் கத்தியால் குத்தியவேளை மற்றையவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த நபர் நெஞ்சில் தாக்கிய நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தோடு, தொடர்புடைய ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பிலான விசாரணைகளினை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்