‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு: திருக்கோவி...
News
‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு: திருக்கோவில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் 40 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 26 வயதுடைய சந்தேகநபர் இன்று (06) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நளிந்த பீரிஸுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே விநாயகபுரம் 01, முன்பள்ளி வீதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்குப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேமுல்லவின் ஆலோசனையிலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் மேற்பார்வையிலும், பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தயாரத்னவின் வழிநடத்தலிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் நேரடி கண்காணிப்பில், பொலிஸ் சார்ஜன்ட் விஜேகுமார (73646), பொலிஸ் கான்ஸ்டபிள்களான சமன் (79521), ருக்ஷான் (93542) ஆகியோர் அடங்கிய குழுவினர் இக்கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை திருக்கோவில் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்