
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களிடம் பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற 08 முறைப்பாடுகளை ஆராய்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது அவர் 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, சம்பவம் தொடர்பில் ஹலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.