
பதிவேடுகள் மற்றும் பதிவுகள் மேலாண்மை தொடர்பான தேசிய கொள்கை வரைவு குறித்த பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஆவணக் காப்பகத் துறை தெரிவித்துள்ளது.
அத்தோடு, சம்பந்தப்பட்ட வரைவுகளுக்கான பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் சேகரிப்பு வரும் 14 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.