நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்முனை தொகுதி முக்கியஸ்தருமான ரிஸ்லி முஸ்தபாவின் நிதியின் மூலம் சம்மாந்துறை ஸ்டார் லைப் மகளிர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
சம்மாந்துறை ஸ்டார் லைப் மகளிர் அபிவிருத்தி சங்க செயலாளர் ஐ.எல். பரீதாவின் நெறிப்படுத்தலில் சங்கத்தலைவி எம்.எம். ரபீக் பாயிஸாவின் தலைமையில் சம்மாந்துறையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்முனை தொகுதி முக்கியஸ்தருமான ரிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாக கலந்துகொண்டு காலை உணவை தயாரித்து விற்பனை செய்யும் வாழ்வாதார பொருட்களை வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை ஸ்டார் லைப் மகளிர் அபிவிருத்தி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.